தொலைக்காட்சி நிரற்படுத்தலை இரத்து செய்யுமாறு அமைச்சர் கெஹெலியவிடம் கோரிக்கை

தொலைக்காட்சி நிரற்படுத்தலை இரத்து செய்யுமாறு அமைச்சர் கெஹெலியவிடம் கோரிக்கை

தொலைக்காட்சி நிரற்படுத்தலை இரத்து செய்யுமாறு அமைச்சர் கெஹெலியவிடம் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 12:42 pm

தொலைக்காட்சி நிரல்படுத்தல்களுக்கு உபயோகிக்கும் தரவுகளில் நம்பகத்தன்மை தொடர்பில் ஊடக மற்றும் பொதுத்தொடர்பாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் ஆகியோர் ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

தொலைக்காட்சி நிரற்படுத்தல்களுக்கு பயன்படுத்தும் தரவுகளின் நம்பகத்தன்மை தொடர்பில் சிக்கல் காணப்படுவதாக இந்த கலந்துரையாடலில் ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தப் பிரச்சினை தீர்வு காணும் வரையில் நிரற்படுத்தல் அறிக்கைகளை இரத்துச்செய்யுமாறு ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிபுணர் குழுவொன்றை நியமித்து இந்த நிரற்படுத்தல் அறிக்கைகளின் நம்பகத்தன்மை தொடர்பில் சுயாதீன ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்