திருமலையில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

திருமலையில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

திருமலையில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 2:57 pm

திருகோணமலை, மொறவெவ – தெவணி பியவர பகுதியில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் தனிமையில் இருந்த 37 வயதான பெண்ணை, மதுபோதையில் இருந்த சந்தேகநபர் நேற்றிரவு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்டவர் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மொறவெவ பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்