தமிழர் விடுதலைக் கூட்டணியை புறந்தள்ளி தமிழ்க் கூட்டமைப்பு செயற்படுகிறது; இரா.சங்கையா குற்றச்சாட்டு

தமிழர் விடுதலைக் கூட்டணியை புறந்தள்ளி தமிழ்க் கூட்டமைப்பு செயற்படுகிறது; இரா.சங்கையா குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 7:11 pm

தமிழர் விடுதலைக் கூட்டணியை புறந்தள்ளி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்ர் விடுதலைக் கூட்டணி சார்பாக அதன் நிர்வாகச் செயலாளர் இரா.சங்கையா விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

வெறுமனே சுயநலத்தையும், பதவிகளையும் மனதில் நிறுத்தி செயற்படுகின்ற அரசியல் கட்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணி புறக்கணிக்கப்பட்டு, முன்னெடுக்கப்படுகின்ற பேச்சுவார்த்தைகளோ அல்லது மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளோ பிரயோசனமற்றுப் போய்விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, அதற்கான சில உதாரணங்களும் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை புறக்கணித்து செயற்பட முடியாது எனவும் அந்த கட்சி கூறியுள்ளது.

எது எவ்வாறாயினும், தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளோ அல்லது போராட்டங்களோ வெற்றியடைய வாழ்த்துவதாக தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்