ஜோஸ் பட்லரின் ஆட்டமிழப்பினை நியாயப்படுத்துகிறார் மெத்யூஸ்

ஜோஸ் பட்லரின் ஆட்டமிழப்பினை நியாயப்படுத்துகிறார் மெத்யூஸ்

ஜோஸ் பட்லரின் ஆட்டமிழப்பினை நியாயப்படுத்துகிறார் மெத்யூஸ்

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 5:10 pm

இங்கிலாந்து அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்கச் செய்யப்பட்ட முறைமை சரியானது என இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்..

முழுமையாக விதிமுறைக்கு உட்பட்டே ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எட்பாஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடிய போது பந்துவீசுவதற்கு முன்னர் இரண்டு தடவைகள் ஒட்டம் எடுப்பதற்கு ஜோஸ் பட்லர் முயற்சி செய்திருந்தார்.

இதனையடுத்து எச்சரிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாகவும் ஜோஸ் பட்லர் ஒட்டமெடுக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் பந்துவீச்சாளர் சசித்திர சேனநாயக்க அவரின் விட்கெட்டை தகர்திருந்தார்.

எனினும் இந்த ஆட்டழப்பு வரவேற்கத்தக்க ஓர் வியடம் அல்லவென இங்கிலாந்து அணித் தலைவர் அலிஸ்டெயார் குக் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்