சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல தயாராகவிருந்த 13 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல தயாராகவிருந்த 13 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல தயாராகவிருந்த 13 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 3:11 pm

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதற்கு தயாராகவிருந்த 13 பேர் மொரட்டுவையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மொரட்டுவை – லுணாவ பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள ஒருவரின் உதவியுடன் சந்தேகநபர்கள் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு பணத்துடன் வந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

லுணாவ பகுதியிலுள்ள விடுதியில் சந்தேகநபர்கள் கடந்த 26ஆம் திகதி முதல் தங்கியிருந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, முள்ளியவளை மற்றும் நெடுங்கேணி பகுதிகளை சேரந்தவர்களே  கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்