சஜித் பிரேமதாஸ முதன் முறையாக பாராளுமன்ற அக்ராசனத்தில் அமர்ந்தார்

சஜித் பிரேமதாஸ முதன் முறையாக பாராளுமன்ற அக்ராசனத்தில் அமர்ந்தார்

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 6:52 pm

பாராளுமன்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச இன்று அக்ராசனத்தில் அமர்ந்தார்.

பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின் தலைமையில் சபை நடவடிக்கைகள் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆரம்பமாகின.

சபாநாயகர் அல்லது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் ஆகியோர் இல்லாத நிலையில் பாராளுமன்ற சபை அமர்வுகள் இடம்பெற்ற போது, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அக்ராசனத்தில் அமர்வதற்கான வழிவகைகள் காணப்படுகின்றன.

இதன் பிரகாரம் சபையினரின் இணக்கத்துடன் சஜித் பிரேமதாச அக்ராசனத்தில் அமர்ந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அக்ராசனத்தில் அமர்ந்த முதலாவது சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்