கோபிநாத் முண்டேயின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

கோபிநாத் முண்டேயின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

கோபிநாத் முண்டேயின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 4:39 pm

வாகன விபத்தில் உயிரிழந்த இந்திய மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் பூதவுடல் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

பூதவுடலுக்கு அவரது சொந்த ஊரான லத்தூரில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர், முண்டேவின் பூதவுடல் நேற்று மாலை மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று காலை அவரது சொந்த கிராமமான லத்தூரிற்கு கொண்டு செல்லப்பட்ட அன்னாரின் பூதவுடல் இன்று பிற்பகல் 2 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது.

64 வயதான கோபிநாத் முண்டே மகாராஷ்டிரா மாநில அவையில் 5 முறை  உறுப்பினராகவும் முதல்வராகவும் இருந்துள்ளார். 1992 முதல் 1995 வரை மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2014 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் பீட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்