கிளிநொச்சி நடைபாதை வியாபாரிகள், பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இடையே முறுகல்

கிளிநொச்சி நடைபாதை வியாபாரிகள், பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இடையே முறுகல்

கிளிநொச்சி நடைபாதை வியாபாரிகள், பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இடையே முறுகல்

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 7:02 pm

கிளிநொச்சி பொதுச் சந்தையில் நடைபாதை வியாபாரிகளுக்கும், பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் இடைநில் இன்று பிற்பகல் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொதுச் சந்தை நடைபாதையில் பொருட்களை விற்பனை செய்வதற்கு பிரதேச சபையினால் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், பொது சுகாதார பரிசோதகர்களால் வியாபாரிகளின் மரக்கறி உட்பட விற்பனைப் பொருட்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதன்போது தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நடைபாதை வியாபாரிகள், பொது சுகாதார பரிசோதகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஆயினும், தற்காலிக இடங்களில் விபாயாரத்தில் ஈடுபடுகின்ற தமக்கு பிரதேச சபையினால் பொருள் விற்பனைக்குத் தடை விதிக்கப்படவில்லை என வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிளிநொச்சி பொதுச் சந்தையில் வியாபாரம் செய்வதற்குரிய கடை வசதிகள் தமக்கு வழங்கப்படவில்லை என்றும், ஒருசில நடைபாதை வியாபாரிகளுக்கு இந்த தடை அமுல் செய்யப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமக்கான நிரந்தர கடை வசதிகளை வழங்கிய பின்னரே நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான விதிமுறைகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என இதன்போது வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்