இலங்கைக்கு எதிரான தொடரின் தென்னாபிரிக்க தலைவராக அம்லா நியமனம்

இலங்கைக்கு எதிரான தொடரின் தென்னாபிரிக்க தலைவராக அம்லா நியமனம்

இலங்கைக்கு எதிரான தொடரின் தென்னாபிரிக்க தலைவராக அம்லா நியமனம்

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 11:07 am

தென்னாபிரிக்க டெஸ்ட்  கிரிக்கெட் அணியின் தலைவராக ஹாசிம் அம்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க டெஸ்ட் அணித் தலைவர் கிரஹம் ஸ்மித் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்ற நிலையில், அணியின் புதிய தலைவர் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

31 வயதான ஹாசிம் அம்லா இதுவரை 76  டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, 51.35 என்ற சராசரியில் 6,214 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்க டெஸ்ட் அணிக்கு அம்லா தலைவராக செயற்படவுள்ளார்.

இந்த சுற்றுப் பயணத்தின்போது இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளன.

இதேவேளை, ஒரு நாள் போட்டி அணியின் தலைவராக ஏபி.டி.வில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்