இன்ஸ்டாகிராமில் அரை நிர்வாணப் படங்கள்; தடையை நியாயப்படுத்துகிறார் கெவின் சிஸ்ட்ரோம்

இன்ஸ்டாகிராமில் அரை நிர்வாணப் படங்கள்; தடையை நியாயப்படுத்துகிறார் கெவின் சிஸ்ட்ரோம்

இன்ஸ்டாகிராமில் அரை நிர்வாணப் படங்கள்; தடையை நியாயப்படுத்துகிறார் கெவின் சிஸ்ட்ரோம்

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 10:29 am

இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் சேவையான, இன்ஸ்டாகிராம், (Instagram) பெண்கள் தங்களது அரை நிர்வாணப் படங்களை பிரசுரிப்பதைத் தடை செய்திருப்பதை அந்த நிறுவனத்தின் தலைவர் கெவின் சிஸ்ட்ரோம், நியாயப்படுத்தியிருக்கிறார்.

பெண்கள் தங்கள் உடலின் மேல் பாதி ஆடையில்லாமல் இருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்த தளத்தில் பிரசுரிப்பதற்கு அந்த நிறுவனம் விதித்திருந்த தடையை, பல பிரபலங்கள் உட்பட, பல பயன்பாட்டாளர்கள் விமர்சித்திருந்ததை அடுத்து இவரது இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

பிரபல பாடகி ரிஹானா, தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில், தான் தன்னைத்தானே எடுத்துப் பிரசுரித்திருந்த இது போன்ற புகைப்படங்களை இந்த நிறுவனம் அகற்றிவிட்டதை அடுத்து, இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பக்கக் கணக்கையே அவர் அகற்றிவிட்டார்.

rihanna
பாடகி ரிஹானா

ரிஹானாவுக்கு இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல மில்லியன் விசிறிகள் இருந்தார்கள்.

இந்த பிரச்சினையை அடுத்து பல பெண்கள், இன்ஸ்டாகிராமுக்குப் போட்டி இணையத் தளமான, ட்விட்டரில், தங்களது மேல் பாதி நிர்வாணப் படங்களை பிரசுரித்திருக்கின்றனர்.

ட்விட்டர் நிறுவனம் இந்த நிர்வாணப் படங்கள் பிரச்சினையில் இது போன்ற கடும் போக்கைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்த்தக்கது.

ஆனால் இன்ஸ்டாகிராமின் இணை நிறுவனரான கெவின் சிஸ்ட்ரோம், இந்தத் தளத்தை பயன்படுத்தும் பதின்ம வயதினர் உட்பட, அனைத்துப் பயன்பாட்டாளர்களுக்கும் நியாயமான விதிமுறைகள் வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ig-logo

-நன்றி பிபிசி தமிழ்-


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்