ஹட்டனில் பாடசாலையில் பணிபுரியும் பெண் லிகிதர் மீது பாலியல் துஷ்பிரயோகம்

ஹட்டனில் பாடசாலையில் பணிபுரியும் பெண் லிகிதர் மீது பாலியல் துஷ்பிரயோகம்

ஹட்டனில் பாடசாலையில் பணிபுரியும் பெண் லிகிதர் மீது பாலியல் துஷ்பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 11:43 am

ஹட்டன் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் லிகிதர் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நோர்வூட் கோர்த்தி பகுதியில்  நேற்றிரவு 11.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காதலிப்பதாக கூறி முச்சக்கர வண்டியில் குறித்த பெண்ணை நேற்றிரவு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெண் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டதன் பின்னர் அவரிடமிருந்த தங்க நகைகளை அபகரித்து கொண்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் பெண் சிகிச்சைகளுக்காக கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்

நாளிதழ் ஒன்றில் வெளியாகிய திருமண சேவை விளம்பரம் ஒன்றின் மூலம் குறித்த பெண்ணுக்கும் , சந்தேகநபருக்கும் இடையில் அண்மைக்காலமாக காதல் தொடர்பு  பேணப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்