இராஜகிரியவில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; மூவர் கைது

இராஜகிரியவில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; மூவர் கைது

இராஜகிரியவில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 1:36 pm

கொழும்பு இராஜகிரிய பகுதியில் மசாஜ்  நிலையம் என்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி மேல்மாகாண குற்றத் தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

26, 21 மற்றும் 20 வயதான யுவதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் கொழும்பு புதுக்கடை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்