மேஜர் சமன் பாலசூரிய மீது துப்பாக்கிப் பிரயோக சம்பவம்; இருவர் கைது

மேஜர் சமன் பாலசூரிய மீது துப்பாக்கிப் பிரயோக சம்பவம்; இருவர் கைது

மேஜர் சமன் பாலசூரிய மீது துப்பாக்கிப் பிரயோக சம்பவம்; இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 1:26 pm

மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் மேஜர் சமன் பாலசூரிய மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவரல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இராணுவ பொலிஸாரால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பணிப்பாளர்  பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

மேஜர் சமன் பாலசூரிய தனிப்பட்ட தேவைக்காக உருபொக்க பகுதிக்கு சென்ற போது நேற்று மாலை 6.45 அளவில் அவர் மீது துப்பாக்கி சூட்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ ஊடகப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

கட்டுத் துப்பாக்கி ஒன்றின் மூலமே மேஜர் சமன் பாலசூரிய மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

துப்பாக்கி சம்பவத்தில் காயமடைந்த இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர்  மாவரல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்