மேஜர் சமன் பாலசூரிய மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம்;  இருவர் கைது

மேஜர் சமன் பாலசூரிய மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இருவர் கைது

மேஜர் சமன் பாலசூரிய மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 7:45 pm

மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் மேஜர் சமன் பாலசூரிய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, இராணுவ பொலிஸாரும்  சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக இராணுவ ஊடகப் பணிப்பாளர்  பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

மேஜர் சமன் பாலசூரிய தனிப்பட்ட தேவைக்காக உருபொக்க பகுதியிலுள்ள தமது காணிக்கு சென்று திரும்பியபோது நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்தார்.

இதன்போது காயமடைந்த அவர் மாவரல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்