மீனவர்கள் – அதிகாரிகளுக்கிடையே முதலைத்தீவில் முறுகல்; களப்பில் மின்கம்பங்கள் அமையவிருப்பதே காரணம் (Video)

மீனவர்கள் – அதிகாரிகளுக்கிடையே முதலைத்தீவில் முறுகல்; களப்பில் மின்கம்பங்கள் அமையவிருப்பதே காரணம் (Video)

மீனவர்கள் – அதிகாரிகளுக்கிடையே முதலைத்தீவில் முறுகல்; களப்பில் மின்கம்பங்கள் அமையவிருப்பதே காரணம் (Video)

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 9:37 pm

புத்தளம் கடலேரியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற   மீனவர்கள் முதலைத்தீவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து அனுராதபுரம் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களுக்கு புத்தளம் கடலேரியின் ஊடாக மின்சாரத்தை கொண்டு செல்லும் வகையில் அதிவலுகொண்ட மின்கம்பங்களை களப்பில் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தமது தொழிலுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட முதலைத்தீவை அண்மித்த கடற்பரப்பில் கடற் படையினரின் படகுகளும் காணப்பட்டமை நியூஸ்பெஸ்ட்டின் கமராக்களில் பதிவானது.

முதலைத்தீவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் கடற்படையினர் கலந்துரையாடியதுடன், தீவில் நிர்மாணப் பணிகளுக்காக வந்திருந்த அதிகாரியொருவர் மீனவர்களிடம் கேள்வி எழுப்பியதை அடுத்து அங்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை. மீனவக் கிராமத்திற்கு வந்திருந்த அதிகாரிகளுக்கும் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை உருவாகியது.

பின்னர் அங்கிருந்த அதிகாரியொருவர் தாம் வந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

எதிர்ப்பில் ஈடுபட்ட மீனவர்களை சந்திப்பதற்கு புத்தளம் மேயர் கே.ஏ.பாயிஸ் அங்கு வந்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்