மாத்தளையில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல்

மாத்தளையில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல்

மாத்தளையில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 1:20 pm

மாத்தளை வில்கமுவ பகுதயில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

தாக்குதல் மேற்கொண்ட ஒருவரும் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய  இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

வில்கமுவ பகுதியில்   மரண வீடொன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும்   பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்