நேர்மைக்கு கிடைத்த பரிசு 5000 டொலர்கள்

நேர்மைக்கு கிடைத்த பரிசு 5000 டொலர்கள்

நேர்மைக்கு கிடைத்த பரிசு 5000 டொலர்கள்

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 3:04 pm

பாதுகாப்பு வாகனத்தில் இருந்து கீழே விழுந்த 1,25,000 டொலர் (சுமார் 1,61,25,000 ரூபா) பணத்தை மீள ஒப்படைத்தவரின் நேர்மையை பாராட்டி, 5,000 டொலர்கள் (சுமார் 6,45,000) பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இயங்கும் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜோ கோனெல், அந்தப் பகுதி வழியாகச் சென்ற குறித்த பாதுகாப்பு நிறுவனத்தின் வாகனத்திலிருந்து 1,25,000 டொலர்களுடன் பணப் பை கீழே விழுந்துள்ளது.

அதில் பணம் இருப்பதை அறிந்த கார்னெல், பணப் பையை காவலர்களிடம் ஒப்படைத்துள்ளார். கார்னெலின் நேர்மையைப் பாராட்டி, அந்த நிறுவனம் அவருக்கு 5,000 டொலர்களும், அவர் பணியாற்றும் தொண்டு நிறுவனத்திற்கு 5,000 டொலர்களும் பரிசு வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்