நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே டெங்கு அபாயம் குறைவாக உள்ளது – சுகாதார அமைச்சு

நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே டெங்கு அபாயம் குறைவாக உள்ளது – சுகாதார அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 6:56 pm

மேல் மாகாணத்தைத் தவிர மேலும் நான்கு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டம் மாத்திரம் டெங்கு அபாயம் குறைவாக உள்ள மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன கூறியுள்ளார்.

வடக்கு, வடமேல், கிழக்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் நீடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் யாழ்ப்பாணம், புத்தளம், குருநாகல், மட்டக்களப்பு, இரத்தினபுரி, திருகோணமலை, கேகாலை, மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஆயிரத்து 106 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 60 வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்