நாடு கடந்த குற்றங்களை தடுப்பதற்காக இலங்கை, ரஷ்யா இணைந்து செயற்பட இணக்கம்

நாடு கடந்த குற்றங்களை தடுப்பதற்காக இலங்கை, ரஷ்யா இணைந்து செயற்பட இணக்கம்

நாடு கடந்த குற்றங்களை தடுப்பதற்காக இலங்கை, ரஷ்யா இணைந்து செயற்பட இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 9:01 pm

நாடு கடந்த குற்றங்களை தடுப்பது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு இலங்கையும் ரஷ்யாவும் இணைந்து செயற்படவுள்ளன.

பொலிஸ் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் குற்றங்களைத் தடுத்தல் தொடர்பில் ரஷ்ய உள்விவகார அமைச்சுக்கும் இலங்கை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுக்கும் இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளன.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் பாரிய குற்றங்கள் தொடர்பில் தகவல்களை பரிமாற்றுவது தொடர்பான இரு தரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், மனிதர்கள் மற்றும் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள், ஊழல், போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் பண மோசடி போன்ற குற்றங்கள் குறித்து இரண்டு நாடுகளும் தகவல்களைப் பரிமாற்றவுள்ளன.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்