தலிபான்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் படைவீரர் விடுவிப்பு

தலிபான்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் படைவீரர் விடுவிப்பு

தலிபான்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் படைவீரர் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 8:19 am

ஆப்கானிஸ்தான் தலிபான்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த  அமெரிக்கப் படைவீரர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

28 வயதான குறித்த படைவீரர் சிறந்த உடல்நலத்துடன் அமெரிக்க படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

கட்டாரின் மத்தியஸ்தத்துடன் தலிபான்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஐந்து வருடங்களின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்

இதேவேளை உடன்படிக்கையின் பிரகாரம் குவண்டனாமோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐவரை அமெரிக்கா விடுதலை செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலிபான்களால்  தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரேஒரு அமெரிக்க படைவீரர்  இவரென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்