காய்ச்சல் தொடர்பில் வருவோருக்கு  நாளை முதல் விசேட பரிசோதனை

காய்ச்சல் தொடர்பில் வருவோருக்கு நாளை முதல் விசேட பரிசோதனை

காய்ச்சல் தொடர்பில் வருவோருக்கு நாளை முதல் விசேட பரிசோதனை

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 10:19 am

டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளில் காய்ச்சல் தொடர்பில் சிகிச்சை பெற வருவோருக்கு தனியான பரிசோதனைகளை மேற்கொள்ள விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

இந்த விசேட வேலைத்திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார பணிப்பாளர்  நாயகம் டொக்டர் பாலித மஹீபால தெரிவித்தார்.

இதற்கமைய நோயாளர்களுக்கான குருதி பரிசோதனை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார பணிப்பாளர்  நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

தமது வீட்டின் சுற்று சூழலை சுத்தமாக வைத்திருப்பது, தேவையற்ற விதத்தில் நீர் தேங்கும் இடங்களை இல்லாதொழிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, டெங்கு காய்ச்சல் பரவும் 35 சுகாதார பரிசோதகர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்தறை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் சுமார் 15 சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் டெங்கு காய்ச்சல் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பு பரவும் பகுதிகளில் இரசாயன வாயுக்களை வீசுறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்