ஐ.நாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளது; தமிழ்க் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

ஐ.நாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளது; தமிழ்க் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

ஐ.நாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளது; தமிழ்க் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 7:10 pm

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

‘அனைத்துல சமூகமும் தமிழ்த் தேசிய அரசியலும்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு நேற்று மாலை  மட்டக்களப்பு கல்லடி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

எம்.ஏ.சுமந்திரன்
[quote]சரணடைந்து காணாமற் போனவர்கள் 1,018 பேர் என்று தங்களுக்கு சாட்சியம் கிடைத்தாக சொல்யிருக்கிறார்கள். சாட்சியம் கொடுக்காத எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். ஆனால் சாட்சியம் கொடுத்தவர்களின் எண்ணிக்கையில் இருந்து அது 1,018 என்று ஒரு பட்டியலிலே காட்டியிருக்கின்றார்கள். ஆனால் அதைக்காட்டிவிட்டு அது குறித்து அவர்கள் சொல்லுகிற அறிக்கை இந்த சரணடைவு என்கின்றது பரவலாக இடம்பெறவில்லை. ஓரிரு பேர் கீழ் மட்ட அதிகாரிகளிடத்திலே சரணடைந்திருக்க கூடும் என்று சொல்லுகிறார்கள். அப்படியாக அவர்களுடைய அறிக்கையிலே இருக்கிற விடயங்களையே நாங்கள் பல உதாரணங்கள் மூலமாக இந்த பொறுப்பு கூறுகிற கடப்பாட்டிலே முழுமையாக தவறியிருக்கிறார்கள். ஆகையாலே ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு கொடுத்த அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்த ஆணைக்குழு மூலம் அது நிறைவேற்றப்படவில்லை என்பதை நாங்கள் ஒரு புத்தகமாக அடித்து வெளியிட்டிருக்கிறோம்.[/quote]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

[quote]கௌரவ நரேந்திர மோடி அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்ததன் பிறகு இலங்கையின் அதிபரை சந்தித்தபோது 13 ஆவது திருத்தச்சட்டமூலத்தை பூரணமாக செயல்படுத்துங்கள் என்று கூறியிருக்கின்றார். அமைச்சரவையில் இருக்கின்ற சிரேஷ்ட அமைச்சர்  நிமால் சிறிபாலடி சில்வா கூட நரேந்திர மோடியல்ல யார் சொன்னாலும் எமது தெரிவுக்குழுவுக்கு வராமல் பதின்மூன்றோ ,13 ப்ளஸ்ஸோ அல்லது 13 மைனசோ எதுவும் நடந்துவிட முடியாது. தெரிவுக்குழுவுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று நிமல் சிறிபாலடி சில்வா அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.[/quote]
13 ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் என கருத முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறுகின்றார்.

[quote]13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனைக்கு தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. யாராவது 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசினால் அது சரி இந்தியா சொல்வதை போன்று கட்டியெழுப்புங்கள். அதில் பல நல்ல விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக அதுதான் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் என்று நான் ஒரு போதும் நினைக்கவில்லை என்பதனை இந்த சந்தர்ப்பத்தில் நாம் தெளிவாக கூறுகின்றோம். நீங்கள் 13 கட்டமைப்பை பூரணமாக்குங்கள் அதற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை நிறைவேற்றுங்கள் அரசியல் தீர்வை காணுங்கள் என்று தானே சொல்லியிருக்கின்றார்கள். இந்த நாட்டிலே ராஜபக்ஸ அரசாங்கம் சந்திரிக்கா பண்டராநாயக்கா ஜனாதிபதியாக இருந்த அரசாங்கமும் வேறு வேறு மாற்றுத்திட்டங்களை முன்வைத்திருப்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டால் வெட்கப்படுகின்றனர். 13 ஆவது திருத்த சட்டம் தான் இறுதி தீர்வல்ல அதற்கு அப்பால் சென்று நாங்கள் தீர்க்க வேண்டும் என்பது தான் அதை தெளிவாக சுட்டிக்காட்டியிருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேணடும் என்பதை நான் இந்த இடத்தில் விண்ணப்பிக்கிறேன்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்