ஏழு ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது இலங்கை

ஏழு ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது இலங்கை

ஏழு ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது இலங்கை

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 8:39 am

இறுதி வரை விறுவிப்பாக நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான 4 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 301 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 293 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 111 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டினை எதிர்நோக்கியிருந்தது.

எனினும் 6 விக்கெட்டுக்காக இணைந்த ஜோஸ் பட்லர் மற்றும் ரவி பொப்பரா ஜோடி 133 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு சவாலை ஏற்படுத்தியிருந்தனர்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் 74 பந்துகளில் 121 ஓட்டங்களையும் ரவி பொப்பாரா 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

லசித் மாலிங்க மூன்று விக்கெட்டுக்களையும் அஜந்த மெண்டிஸ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  இலங்கை அணி குமார் சங்க்கார பெற்ற சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்களைப் பெற்றது.

குமார் சங்க்கார 112 ஓட்டங்களையும் ரி எம் டில்ஷான் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஹரி கேனி நான்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன் , ஜேம்ஸ் அண்டசன் மற்றும் கிறிஸ் ஜோடான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டகாரராக ஜோஸ் பட்லர் தெரிவுசெய்யப்பட்டதுடன் 5 போட்டிகளைக் கொண்ட இந்த தொடர் 2 க்கு 2 என சமநிலை பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்