இலங்கை தேசியப் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் தலையிட வேண்டும்; மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பேரணியில் கோரிக்கை

இலங்கை தேசியப் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் தலையிட வேண்டும்; மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பேரணியில் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 7:51 pm

பாரதத்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தும், இலங்கையின் பிரச்சினையில் அவர் விரைந்து தலையிட்டு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபவனி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்து சமயப் பேரவையும், இலங்கை இந்திய நட்புறவு கழகமும் இணைந்து இந்த நடைபவனியை ஏற்பாடு செய்திருந்தன.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை அடுத்து ஆரம்பமான நடைபவனி வீரமாகாளி அம்மன் ஆலயத்தை சென்றடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அங்கிருந்து அம்மன் வீதி ஊடாக பலாலி வீதியை அடைந்த நடைபவனி இந்து சமயப் பேரவையின் முன்றலில் நிறைவு பெற்றுள்ளது.

இலங்கையின் தேசியப் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் தலையீடு செய்து சுமூகமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்