இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு உதவ வேண்டும் – விஜயகாந்த்

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு உதவ வேண்டும் – விஜயகாந்த்

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு உதவ வேண்டும் – விஜயகாந்த்

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 5:39 pm

தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்கும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரி தமிழக சட்ட மன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் இந்தியப் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் விஜயகாந்த் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இலங்கையை நட்பு நாடாக கருதி இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இலங்கை மாறுபட்ட நிலைப்பாட்டிலேயே உள்ளதாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும்  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விஜயகாந்த், அவர்களது மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போன்று அனைத்து உரிமைகளுடனும் வாழ்வதற்கேற்ற சூழலை மத்திய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என பாரதப் பிரதமருக்கு விஜயகாந்த் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்