இந்தியாவின் 29ஆவது மாநிலமாக இயங்கவுள்ளது ‘தெலங்கானா’

இந்தியாவின் 29ஆவது மாநிலமாக இயங்கவுள்ளது ‘தெலங்கானா’

இந்தியாவின் 29ஆவது மாநிலமாக இயங்கவுள்ளது ‘தெலங்கானா’

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 8:11 pm

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக தெலங்கானா நாளை முதல் இயங்கவுள்ளது.

தெலங்கானாவில் இதுவரை அமுலில் இருக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சி நாளை பகுதியளவில் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெலங்கானாவின் முதல்வராக தெலங்கானா ராஷ்டர சமிதி தலைவர் கே.சந்திர சேகர் ராஓ பதவியேறகவுள்ளார்.

இவரின் பதவிறேபு நிகழ்வு நாளை காலை ஆந்திர மற்றும் தெலங்கானா மாநில ஆளுனர் முன்னிலையில் இடம்பெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலுடன் தெலங்கானாவின் சட்ட மன்றத் தேர்தலும் இடம்பெற்றது. தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி மன்றத்தின் 119 ஆசனங்களில் 63 ஆசனங்களை கைப்பற்றி வெற்றியீட்டியது.

இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி சந்திரசேகர ராஓ தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் வரை மத்திய அரசின் ஆட்சியின் கீழ் தெலங்கானா செயற்படவுள்ளது.

சந்திரசேகர ராஓ தெலங்கானாவின் முதல்வராக பதவியேற்றதன் பின்னர் தெலங்கானாவின் உருவாக்கத் தின உத்தியோபூர்வ நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக தெலங்கானா ராஷ்டர சமிதி கட்சி அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்