ஹட்டனில் பஸ் விபத்து; 17 பேர் காயம்(video)

ஹட்டனில் பஸ் விபத்து; 17 பேர் காயம்(video)

எழுத்தாளர் Staff Writer

31 May, 2014 | 12:36 pm

ஹட்டன் வனராஜா பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

பொகவந்தலாவையில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்சும் கொட்டக்கலையில் இருந்து நோவூட் நோக்கிச் சென்ற ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிய பஸ்சும் மோதியதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 15 பெண்களும் 2 ஆண்களும் அடங்கியுள்ளதாக வைத்தியாசலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்