கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள்

எழுத்தாளர் Staff Writer

31 May, 2014 | 7:31 pm

கிளிநொச்சி இரணைமடு குளத்திலிருந்து யாழ். குடாநாட்டிற்கு நீரை விநியோகிக்கும் திட்டம் தொடர்பிலான இழுபறிநிலை நீடிக்கின்றது.

இந்த விடயம்  கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  இன்று வாதப் பிரதிவாதங்களை தோற்றிவித்திருந்தது

கிளிநொச்சி மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் மூன்றாம் நாள்  அமர்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று காலை 9.30 அளவில் ஆரம்பமாகியது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமைவகித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்