பொகவந்தலாவை கொலைச் சம்பவம்; சந்தேகநபர் வெள்ளவத்தையில் கைது

பொகவந்தலாவை கொலைச் சம்பவம்; சந்தேகநபர் வெள்ளவத்தையில் கைது

பொகவந்தலாவை கொலைச் சம்பவம்; சந்தேகநபர் வெள்ளவத்தையில் கைது

எழுத்தாளர் Staff Writer

31 May, 2014 | 1:13 pm

பொகவந்தலாவை மற்றும் வட்டவலை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருடன் 31 வயதான பெண்ணொருவரும் இன்று காலை வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கைது செய்யப்பட்டுள்ள பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவ மற்றும் வட்டவல பொலிஸ் பிரிவுகளில் பண மோசடி, தங்க நகை அபகரிப்பு போன்ற குற்றச்சாட்டுக்களில் சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களை கல்கிஸ்சை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்