பதுளையில் கற்பாறை சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

பதுளையில் கற்பாறை சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

பதுளையில் கற்பாறை சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

31 May, 2014 | 7:38 pm

பதுளை தெமோதரை எத்துல்கந்த கற்குழியில் கற்பாறை சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று முற்பகல் 11.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கற்குழியில் தொழில்புரிந்த, தெமோதரை பகுதியை சேர்ந்த  31 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்