படையணி பயிற்சி முகாமிற்கு சென்றிருந்த மாணவன் துஷ்பிரயோகம்; இராணுவ உறுப்பினருக்கு விளக்கமறியல்

படையணி பயிற்சி முகாமிற்கு சென்றிருந்த மாணவன் துஷ்பிரயோகம்; இராணுவ உறுப்பினருக்கு விளக்கமறியல்

படையணி பயிற்சி முகாமிற்கு சென்றிருந்த மாணவன் துஷ்பிரயோகம்; இராணுவ உறுப்பினருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

31 May, 2014 | 10:19 am

ரன்தம்பே மாணவர் படையணி பயிற்சி முகாமிற்கு சென்றிருந்த மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ உறுப்பினர் அடுத்த மாதம் பத்தாம் திகதி வரை விளக்கமயிலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒன்று ஒன்பது இரண்டு ஒன்பது என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபரான இராணுவ உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேகநபர்  மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

36 வயதான குறித்த இராணுவ உறுப்பினர் 14 வயதான மாணவனை, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்