தாய்லாந்து இராணுவத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவோருக்கு எச்சரிக்கை

தாய்லாந்து இராணுவத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவோருக்கு எச்சரிக்கை

தாய்லாந்து இராணுவத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவோருக்கு எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

31 May, 2014 | 12:18 pm

தாய்லாந்தில் ஒர் ஆண்டிற்கும் அதிககாலம் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என சதிச் செயற்பாட்டில் ஈடுபட்ட இராணுவத் தலைவர் பிரயுத் ஷான் ஒஸா அறிவித்துள்ளார்.

நாட்டில் நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து தரப்பினரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஆர்ப்பாட்டங்களை நிறுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவோருக்கும் அவர் மீண்டும் எச்சரிக்கை செய்துள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த 22 ஆம் திகதி ஆட்சியைக் கைப்பற்றிய தாய்லாந்து இராணுவம் சிரேஷ்ட அரசியல்வாதிகளை பல நாட்கள் தடுத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

சதி நடவடிக்கை அடுத்து முதல் முறையாக தொலைகாட்சி ஊடாக பொதுக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்