கொழும்பில் 9 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பில் 9 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பில் 9 மணித்தியால நீர் வெட்டு

எழுத்தாளர் Staff Writer

31 May, 2014 | 10:00 am

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு ஒன்பது மணி தொடக்கம் நாளை காலை ஆறு மணிவரை ஒன்பது மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய டிக்மன்ஸ் வீதி சந்தியிலிருந்து, பம்பலப்பிட்டி சந்தி வரையான பகுதி மற்றும் அதனுடன் தொடர்புடைய குறுக்கு வீதிகளுக்கான நீ்ர் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு தலைநகர அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் நீர் குழாய்களைக் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமையே இதற்கு காரணமென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்