இந்து சமுத்திர டூனா மாநாடு நாளை ஆரம்பம்

இந்து சமுத்திர டூனா மாநாடு நாளை ஆரம்பம்

இந்து சமுத்திர டூனா மாநாடு நாளை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

31 May, 2014 | 1:31 pm

இந்து சமுத்திர டூனா ஆணையத்தின் 18 வது மாநாடு கொழும்பில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு  தெரிவித்துள்ளது.

இந்து சமுத்திர டூனா ஆணையத்தின் 31 அங்கத்துவ நாடுகளும் மேலதிகமாக 4  நாடுகளின் பங்கேற்புடன் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

35 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 250 உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

குறிப்பாக இந்து சமுத்திரத்தில் காணப்படும் சூரை மீன் வளத்தை பாதுகாப்பது தொடர்பிலும், இந்து சமுத்திர கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுதல், அனுமதிபத்திரமின்றி கடற்றொழிலில்  ஈடுபடுகின்றமை போன்ற பல காரணிகள் தொடர்பில் மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.

இலங்கைபை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம் மற்றும் நாரா நிறுவன அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

இந்து சமுத்திர டூனா ஆணையகத்தினால் 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்து சமுத்திரத்தில் சூரை மீன் பிடிப்பதற்கு இலங்கைக்கு தடை விதிப்பதற்கான நிலைமை காணப்பட்டதாகவும் அதன் பின்னர் கடற்றொழில் அமைச்சின் நடவடிக்கையால், இந்து சமுத்திரத்தில் சூறை மீன் பிடிப்பதற்கான அனுமதி மீள கிடைக்கப்பட்டதாகவும் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்து சமுத்திர டூனா ஆணையத்தின் 18 ஆவது மாநாட்டிற்கு மொரிஸியஸ் நாட்டின் பிரதிநிதி தலைமை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்