இங்கிலாந்து அணிக்கு ​வெற்றி இலக்கு 301

இங்கிலாந்து அணிக்கு ​வெற்றி இலக்கு 301

இங்கிலாந்து அணிக்கு ​வெற்றி இலக்கு 301

எழுத்தாளர் Staff Writer

31 May, 2014 | 8:09 pm

கிரிக்கட் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கட் அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது .

இந்தப் போட்டியில் முதலில் துடுப்படுத்தாடி வரும் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களை பெற்றுள்ளது

லண்டனின் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இஙகிலாந்து அணி முதலில் துடுப்படுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது.

இலங்கை அணி சார்பில் அதிக பட்சமாக குமார் சங்கக்கார 112 ஓட்டங்களையும் திலகரத்ன டில்ஷான் 71 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

kumar-Sangakkara

லோட்ஸ் மைதானத்தில் தனது முதல் சதத்தை சங்கக்கார இன்று பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்