அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் காலமானார்

அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் காலமானார்

அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

31 May, 2014 | 9:31 am

அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரனும் மத்திய மாகாண சபையின் முன்னாள் தவிசாளருமான சாலிய பண்டார திசாநாயக்க தமது 48 ஆவது வயதில் காலமானார்.

அன்னார் நோய்வாய்ப்பட்டு பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சாலிய பண்டார திசாநாயக்க இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

மத்திய மாகாண போக்குவரத்து மற்றும் சுகாதார அமைச்சராகவும் அன்னார் பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்