English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 May, 2014 | 5:27 pm
கலிபோர்னியாவை தளமாகக் கொண்டியங்கும் ஸ்பேஸ்-எக்ஸ் என்ற நிறுவனம், மீளப் பயன்படுத்தக்கூடிய விண்ணோடம் ஒன்றை தயாரித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை கொண்டுசெல்லக்கூடிய இந்த விண்ணோடம், அங்கிருந்து திரும்பிவந்து பூமியில் எந்தவொரு இடத்திலும் மீண்டும் தரையிறங்கக்கூடியது என்று அதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
ட்ராகன் வி-2 (Dragon V -2) என்ற இந்த விண்ணோடம் தரையிறங்குவதற்கு ஓடுபாதை எதுவும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட உந்துகருவிகளுடன் தரையிறங்குவதற்கான கால்களும் இதற்கு உண்டு.
ஏற்கனவே விண்வெளிக்கு பொருட்களைக் கொண்டுசெல்வதற்காக பயன்படுத்தப்பட்ட விண்ணோடத்தின் நவீன ரகமே இந்த ட்ராகன் வி-2 (Dragon V -2) விண்வெளிவீரர்கள் 7 பேரை இந்த வாகனத்தில் கொண்டுசெல்லமுடியும்.
நாசா மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், அதன் விண்ணோட அணிக்கு ஓய்வுகொடுத்ததிலிருந்து, விண்வெளிவீரர்களை விண்வெளிக்கு கொண்டுசேர்ப்பதில் அந்த நிறுவனம் ரஷ்ய விண்ணோடத்திலேயே தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
02 Jul, 2022 | 10:39 PM
02 Jul, 2022 | 05:03 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS