வாக்குரிமையின் அவசியத்தை தெளிவூட்டும் வகையில் யாழில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம்

வாக்குரிமையின் அவசியத்தை தெளிவூட்டும் வகையில் யாழில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம்

வாக்குரிமையின் அவசியத்தை தெளிவூட்டும் வகையில் யாழில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2014 | 3:34 pm

மக்கள் தமது வாக்குரிமையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தெளிவூட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்திலிருந்து இன்று முற்பகல் ஆரம்பமான இந்த விழிப்புணர்வு ஊர்வலம் தபால் நிலையம் வரைச் சென்று அங்கிருந்து யாழ். மத்திய பஸ் தரிப்பிடம் வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மக்களுக்கு தெளிவூட்டல்களை வழங்குவதற்கான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் இடாப்பிலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய அந்தந்த மாவட்டங்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்