மொறகொல்ல கடலில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள், விமானப்படை விமானத்தின் பாகங்கள் அல்ல- விமானப்படை

மொறகொல்ல கடலில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள், விமானப்படை விமானத்தின் பாகங்கள் அல்ல- விமானப்படை

மொறகொல்ல கடலில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள், விமானப்படை விமானத்தின் பாகங்கள் அல்ல- விமானப்படை

எழுத்தாளர் Staff Writer

30 May, 2014 | 3:16 pm

அளுத்கம – மொறகொல்ல கடலிலிருந்து மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள், இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் பாகங்கள் அல்லவென நம்புவதாக விமானப்படை தெரிவிக்கின்றது.

விமானப்படையின் விசேட நிபுணர் ஒருவரினால் நேற்றைய தினம் குறித்த விமான பாகம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் வின் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன குறிப்பிடுகின்றார்.

குறித்த பாகமானது, விமானத்தின் சில்லு என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த பாகம் மீனவர்களினால் நேற்றைய தினம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்