முச்சக்கர வண்டி பெற்றுத்தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது

முச்சக்கர வண்டி பெற்றுத்தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது

முச்சக்கர வண்டி பெற்றுத்தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது

எழுத்தாளர் Staff Writer

30 May, 2014 | 2:46 pm

சுயதொழில் வாய்ப்புக்காக முச்சக்கர வண்டி பெற்றுத் தருவதாக பணமோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் இரத்தினபுரி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான கிடைத்த முறைபாடொன்றின் பிரகாரம் சந்தேகநபரான பெண்ணை நேற்று கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பனாகொட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சுயதொழில் வாய்ப்புக்காக வழங்கப்படும் முச்சக்கர வண்டியை பெற்றுக்கொடுப்பதாக கூறி இருபதாயிரம் ரூபா மோசடி செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த பெண்ணை இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]wsfirst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்