மலையகத்திற்கான ரயில் சேவை தொடர்ந்தும் பாதிப்பு

மலையகத்திற்கான ரயில் சேவை தொடர்ந்தும் பாதிப்பு

மலையகத்திற்கான ரயில் சேவை தொடர்ந்தும் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 May, 2014 | 6:59 pm

மண்சரிவினால் சேதமடைந்த மலையக ரயில் மார்க்கம் பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்படும் வரையில், மீண்டும் அந்த மார்க்கத்தில் பதுளை வரை ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

மண்சரிவு இடம்பெற்ற பகுதியை புவிச் சரிதவியலாளர்களால் ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் பி.ஏ.பீ ஆரியரத்ன குறிப்பிட்டார்.

மலையக ரயில் மார்க்கத்தில் தெமோதர மற்றுட் உடுவர ரயில் நிலையங்களுக்கு இடையில் மண்மேடு மற்றும் கற்கள் சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இதன்காரணமாக, மலையக ரயில் சேவை தொடர்ந்தும் பண்டாரவளை வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் மார்க்கத்தில் விழுந்த 80 கற்பாறைகளில், 48 கற்கள் வெடிக்கச் செய்யப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்