பாவனைக்கு உதவாத 10 கோடி ரூபா பெறுமதியான சொக்லேட் கண்டுபிடிப்பு

பாவனைக்கு உதவாத 10 கோடி ரூபா பெறுமதியான சொக்லேட் கண்டுபிடிப்பு

பாவனைக்கு உதவாத 10 கோடி ரூபா பெறுமதியான சொக்லேட் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 May, 2014 | 7:08 pm

சீதூவ பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து சுமார் 10 கோடி ரூபா பெறுமதியுடைய காலாவதியான சொக்லேட் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்தபோது இந்த சொக்லேட் பறிமுதல் செய்யப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

சொக்லேட் பெக்கெட்டுகளில் 2016 ஆம் ஆண்டுக்குரிய காலாவதி திகதி மோசடியான முறையில் பொறிக்கப்பட்டிருந்தாக அதிகார சபையின் கம்பஹா மாவட்ட தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய சுற்றிவளைப்பின் போது சுமார் 56 ஆயிரம் கிலோகிராம் சொக்லேட் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்