ஜப்பானின் வடக்குப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள்

ஜப்பானின் வடக்குப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள்

ஜப்பானின் வடக்குப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2014 | 7:25 pm

ஜப்பானின் வடக்கு பிராந்தியத்தில் தமது நவீன ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை அமெரிக்க விமானப் படை நிலைநிறுத்தியுள்ளது.

வடகொரியாவின் அணுச் செயற்பாடுகள் மற்றும் சீன கடற்படையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக இந்த நீண்ட தூர கண்காணிப்பு நவீன விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் பசுபிக் பிராந்தியத்தில் படை சமபலத்தை பேணுவதுடன் ஆசியாவின் பாதுகாப்பை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை சொந்த ஆளில்லா விமானங்களை தாயரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சீனாவும் வடகொரியாவும் இந்த நகர்வுக்கு எதிர்ப்பு வெளியிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்