சிறைக்கு செல்லும் ஆர்யா, விஜய்சேதுபதி!

சிறைக்கு செல்லும் ஆர்யா, விஜய்சேதுபதி!

சிறைக்கு செல்லும் ஆர்யா, விஜய்சேதுபதி!

எழுத்தாளர் Staff Writer

30 May, 2014 | 10:48 am

ஆர்யாவும், விஜய்சேதுபதியும் இணைந்து நடித்து கொண்டிருக்கும் படம் புறம்போக்கு. இப்படத்தை எஸ்.பி. ஜனநாதன் 30 கோடி ​செலவில் இயக்க, யு.டி.வி நிறுவனம் தயாரித்துவருகிறது. இதன் படப்பிடிப்புகள் இதுவரை குலுமணாலி மற்றும் புனேயில் நடந்தது.

purampokku002

இப்படத்தை பற்றி சமீபத்தில் ஜனநாதன் கூறுகையில், ‘புறம்போக்கு படக் கதையின் முக்கிய பகுதிகள் சிறைச்சாலையில் நடக்கிறது. இதில் ஆர்யா, விஜய்சேதுபதி, சாம் நடிக்கும் காட்சிகள் படம்பிடிக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறைச்சாலைகளை போய் பார்த்தோம்.

மிகுந்த பாதுகாப்புள்ள சிறைச்சாலைகளில் படம்பிடிக்க அனுமதி இல்லை என்று கூறிவிட்டார்கள். இதனால் சென்னையில் உள்ள பின்னி மில்லில் 2 கோடி செலவில் செட் போட்டு எடுத்து வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

???????????????????????????????????????????????????????????????????????????

மேலும் இப்படப்பிடிப்பு தொடர்ந்து 65 நாட்களுக்கு இந்த செட்டில் நடக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்