சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது

சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது

சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 May, 2014 | 8:49 am

16 வயது சிறுமி ஒருவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும், பெண் ஒருவரும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 23 வயதான முச்சக்கர வண்டி சாரதியுடன் சிறுமி காதல் தொடர்பு  வைத்திருந்ததாக  அதிகார சபை தெரிவிக்கின்றது.

நிர்வாணமாக சிறுமியை படமெடுத்து, அதன்மூலம் அவரை அச்சுறுத்தி  விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த செயலுடன்  தொடர்புடைய 35 வயதான கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தையினால் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் பிரிவுக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்