இரு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை; தாய் மீது தாக்குதல்

இரு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை; தாய் மீது தாக்குதல்

இரு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை; தாய் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2014 | 11:55 am

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்து மரத்தில் தொங்கிவிடப்பட்ட சம்பவத்தில், முறைப்பாட்டை திரும்பப் பெற வலியுறுத்தி, அப்பெண்களின் தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

14, 15 வயதுடைய இரு தலித் சமூகத்தை சேர்ந்த சிறுமிகளை புதன்கிழமை இரவு ஒரு குழுவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டினை ஏற்க மறுத்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாத்காரம் மற்றும் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெண்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்ற பிறகு மேற்கொண்டு விசாரணையை தீவிரப்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டை திரும்பப் பெறக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்களின் தாயாரை ஒரு குழுவினர் அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்