அளுத்கம கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள், விமானம் ஒன்றினதாக இருக்கலாம்- விமானப் படை

அளுத்கம கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள், விமானம் ஒன்றினதாக இருக்கலாம்- விமானப் படை

எழுத்தாளர் Staff Writer

30 May, 2014 | 9:59 am

அளுத்கம – மொரகொல்ல பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் சிக்கிய  பாகங்கள் விமானமொன்றினுடையதாக இருக்கலாம் என விமானப்படை தரப்பு  தெரிவிக்கின்றது.

இந்த பாகங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விமானப்படையின் அதிகாரி ஒருவரை அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன கூறுகின்றார்.

SHIP
மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட பாகங்களை மொரகொல்ல பொலிஸாரிடம் இருந்து விமானப்படை பொறுப்பேற்றுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

கடலில் இருந்து மீட்கப்பட்ட இந்த பாகங்கள் நேற்று பொலிஸாரிடம் மீனவர்களால் ஒப்படைக்கப்பட்டன.

இவை விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்றின் பாகங்களா என இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் விமானப்படை பேச்சாளர் விங்  கொமாண்டர் கிஹான் செனவிரத்ன மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்