விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சிதைவுகள் அளுத்கம கடலில் கண்டுபிடிப்பு (Photos, Video)

விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சிதைவுகள் அளுத்கம கடலில் கண்டுபிடிப்பு (Photos, Video)

விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சிதைவுகள் அளுத்கம கடலில் கண்டுபிடிப்பு (Photos, Video)

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 3:17 pm

அளுத்கம மொறகல கடலில் இருந்து விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சிதைவுகள் சிலவற்றை மீனவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சிதைவுகள் மீனவர்களின் வலையில் சிக்கியிருந்ததாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சிதைவுகளை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதோடு, இது குறித்து விமானப் படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, விமானமொன்றின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் அளுத்கம பொலிஸார் தகவல் வழங்கியுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமான்டர் கிஹான் செனெவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக நிபுணர் ஒருவரை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விமானப் படையின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

SHIP

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்