யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் சட்டவிரோத மீன்பிடி; 1100 கிலோ மீனும் கைப்பற்றல்

யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் சட்டவிரோத மீன்பிடி; 1100 கிலோ மீனும் கைப்பற்றல்

யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் சட்டவிரோத மீன்பிடி; 1100 கிலோ மீனும் கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 3:25 pm

யாழ். நாவாந்துறை பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வலைக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வட மாகாண கடற்றொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களால் இன்று காலை 04 கூட்டம் வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் என் கணேசமூர்த்தி குறிப்பிட்டார்.

கைப்பற்றப்பட்ட தன்கூஸ் வலைகளை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை, சாவல்காடு பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் டைனமைட் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மீன்களின் எடை 1100 கிலோகிராம்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் என் கணேசமூர்த்தி கூறினார்.

கைப்பற்றப்பட்ட மீன்களையும் டைனமட்டையும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வட மாகாண கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்