மீண்டும் களத்தில் லாரா மற்றும் சச்சின்

மீண்டும் களத்தில் லாரா மற்றும் சச்சின்

மீண்டும் களத்தில் லாரா மற்றும் சச்சின்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 4:17 pm

மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பிரைய்ன் லாராவும் இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரும் எம்சிசி அணிக்காக போட்டியொன்றில் விளையாடவுள்ளனர்.

எம்சிசி அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையிலான 50 ஓவர்களைக் கொண்ட இந்தப் போட்டி ஜூலை மாதம் 5ஆம் திகதி லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உலக பதினொருவர் அணிக்கு அவுஸ்திரேலியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் தலைமை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கெவின் பீற்றசன், ஷஹீட் அப்ரிடி, ரினோ பெஸ்ட், போல் கொலிங்வுட், அடம் கில்கிறிஸ்ட், தமீம் இக்பால், முத்தையா முரளிதரன், விரேந்தர் சேவாக், பீற்றர் சிடில் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் உலக பதினொருவர் இடம்பெற்றுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான எம்சிசி அணியில் சஹிட் அஜ்மல், சிவ்நரேன் சந்ரபோல், ராகுல் ட்ராவிட், ஏரன் பின்ஞ், உமர் குல், பிரட் லீ, கிறிஸ் ரீட், ஷோன் ரைட், டானியல் விட்டோரி மற்றும் பிரைன் லாரா ஆகியோர் பெயரிப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்